வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். நண்பர் கூட்டிச் சென்றார். திருநெல்வேலி
சைவப் பிள்ளை. நல்ல செக்கச் செவேலென்ற சிவப்பு. நானும் சைவப்பிள்ளை
Salient Facts-ஐ மட்டும் சொல்கிறேன்.
இருக்கும். அந்தக் கதையில் என்னுடைய மூதாதையராகிய நான்மொழிக்
கோசர் வருவார்கள். கோசர்கள் என்போர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள்
யானை, பல்லக்கு, கத்தி போன்றவற்ரை வைத்திருப்பார்கள். அவர்களுக்குக் குலதேவதையும் இருந்தது. அத்துடன் 'காவல் மரம்' என்றும் ஒன்று இருந்தது.
கொள்வார்கள்.
பிரதேசத்தை ஆண்டுவந்தவன். அது தற்காலக் கேரளா, கொண்கான தேசம், கொங்குநாட்டுப் பகுதிகள் அடங்கியது. நீலமலை என்பதும் அவனுடைய நாட்டிற்குள் அடங்கியது.
பாண்டியர்கள் தமிழகம்/கேரளத்தை ஆண்டுவந்தனர். இவர்களை முடியுடை வேந்தர் என்பார்கள். அவர்களைத் தவிர வேளிர் என்போரும் மான்கள் என்போரும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர். பதினெட்டு வேளிர்களுடன் மற்ற சிற்றரசர்களையும் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
அன்பர்களே,
சங்க இலக்கியத்தில் இரண்டு நன்னன் களைக் காணலாம். நன்னன்
சேய் நன்னன் என்றும் நன்னன் வேண்மான் என்று ஒருவன். அவன் ஒரு
பெரிய வள்ளல். வேளிர் குலத்தோன்.
இவனுடைய தந்தைதான் அந்த இன்னொரு நன்னன். கொடுங்கோலன்.
புலவர்கள் வந்தால் கதவை அடைத்துக்கொள்பவன்.
இவன் ரொம்ப ரொம்ப ஓவியமாக அருமையான மாமரம் ஒன்றை
வைத்திருந்தான். அது மிகச் சுவையான பழங்களை தரக்கூடியது.
ஐந்தாண்டுகள் தனக்காகவே பாதுகாத்துவந்த பின்னர் மிக அருமையாக
அந்த மரம் காய்க்க ஆரம்பித்தது. அதில் ஒரு பழம் பழுத்தவுடன்
மரத்திலிருந்து விழுந்து அருகில் இருந்த ஆற்றில் போய்ச்சேர்ந்தது.
ஆற்றின் போக்கில் போய் ஓரிடத்தில் ஒதுங்கியது. அங்கு குளித்துக்
கொண்டிருந்த பெண் ஒருத்தி அந்தப் பழத்தை எடுத்து சாப்பிட்டாள்.
மரத்திலிருந்த கணியைக் காணாதவுடன் நன்னனின் ஆணையால் தேட
முற்பட்டனர். அந்த ஆற்றங்கரைப் பெண் மாம்பழத்தை உண்டுவிட்டாள்
என்பது தெரிந்ததும் அந்தப் பெண்ணைப் பிடித்து வரச்செய்து அவளைக்
கொன்றுவிடுமாறு நன்னன் உத்தரவிட்டான்.
அந்தப் பெண்ணுடைய தந்தை தன்னுடைய பெண்ணின் எடைக்கு எடை பொன்னையும் பல யானைகளையும் நன்னனுக்குத் தருவதாகச் சொல்லி,
தன் பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் நன்னன் அவளைக் கொல்லச் செய்தான்.
சங்க இலக்கியம் அவனைப் பெண்கொலை புரிந்தவன் என்று
குறிப்பிடுகிறது.
அந்தக் காலகட்டத்தில் சேரநாட்டைக் களங்காய்க்கண்ணி
நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் ஆண்டுவந்தான். சேரல் நன்னனை
அழிப்பதற்காக அவனுடைய படையை அனுப்பினான். சேரலுடைய
படைத்தலைவன் வேளிர் குலத்தைச் சேர்ந்த பெருவீரனும் சிற்றரசனுமாகிய
ஆஅய் எயினன். இவனும்கூட பெரும் கொடையாளி. வேண்டியவர்களுக்கு
யானை முதலியவற்றைக் கொடுப்பவன். நானெல்லாம் எனக்கு
வேண்டாதவர்களுக்குத்தான் யானையைக் கொடுப்பேன். இது சம்பந்தமாக அந்தகக் கவி வீர ராகவ முதலியார் நிகழ்ச்சியும் பாடலும் உண்டு.
நன்னனுடைய படைத்தலைவன் மிஞிலி என்பவன். பெரும் வீரன்.
மிகத் திறமையான போராளி. அவனைப் பற்றி எச்சரித்திருந்தும் ஆஅய்
எயினன் அவனுடன் பாழி என்னும் இடத்தில் போரிட்டான். நன்னனுக்கு
ஏதோ Black Arts தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலிருந்துகொண்டு
மிஞிலிக்குக்குக் கட்டளையிட்டபடி ஆஅய் எயினனை மிஞிலி எதிர்த்து
நின்று போரிட்டு, ஒரே பகற் பொழுத்துக்குள் வேலெறிந்து மிஞிலி ஆஅய்
எயினனைக் கொன்றான்.
ஆஅய் எயினனுடைய தர்மம் அவனைக் காத்தது. வீழ்ந்து கிடந்த
அவனுடைய உடலின்மீது வெய்யில் படாதவாறு பறவைக் கூட்டம் ஒன்று இறக்கைகளை விரித்துப் பறந்து அவன் உடலுக்கு நிழல் கொடுத்தது.
தன்னுடைய படைத்தலைவன் இறந்தான் என்பதை அறிந்த
நார்முடிச்சேரல் பெரும்படையுடன் வந்து பெருந்து¨றையென்னும் இடத்தில்
நன்னனுடைய காவல் மரமாகிய வாகையை வெட்டி எறிந்தான். அந்த இடத்துக்கு வாகைப் பறந்தலை என்ற பெயர் ஏற்பட்டது.
இதனால் வெகுண்ட நன்னன் தன்னுடைய பெரும்படையோடு வந்து
பலநாட்கள் சேரலுடன் போரிட்டான். முடிவில் சேரலனுடைய படையால்
கொல்லப்பட்டான்.
இதுவரை நான் சொன்னது புறநானூறு, மதுரைக்காஞ்சி போன்ற
சங்க நூல்களில் காணப்படும் கதை.
இதைத்தான் வெண்ணிலவு பெண்ணரசியாக மீப சோமு எழுதியிருந்தார்.
அன்புடன்
ஜெயபாரதி
அன்பர்களே,
மீ.ப.சோமுவும் வெண்ணிலவு பெண்ணரசியின் கதைக்கு மூலாதாரத்தைச்
சொல்லிவிட்டேன். இதிலிருந்துதான் அவர் கதையைப் பின்னியிருக்கிறார்.
இந்தக் கதையில் உள்ள நீலமலையில் நீலக்கற்கள் கிடைக்கும்.
அவற்றை யவனர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். இந்த வாணிபத்தில்
நன்னனுக்குப் பெரும் பொருள் சேரும்.
நீலக்கல்லுக்கு குருந்தங்கல் என்ற பெயரும் உண்டு. இந்தக் கல்
ரோமாபுரியில் மிகவும் விருப்பமுடன் வாங்கப்பட்டது. ஆபரணத்துக்கு
மட்டும் அல்ல. அந்தக் காலத்தில் ரோமர்களும் மற்றவர்களும் வரைந்த
வண்ண ஓவியங்களுக்கும் டிஸைன்களுக்கும் நீல நிறத்துக்குக்
குருந்தங்கல் மிகவும் பயன்பட்டது. பளிச்சென்று ஒளியை வாங்கி விடக்
கூடியது அந்தக் கல்லின் நீலநிறம்.
ரோமர்களின் லத்தீன் மொழியில் குருந்தத்தைக் 'கொருண்டும்'
Corundum என்று அழைத்தார்கள்.
ஆங்கிலத்திலும் இதே சொல்தான் வழங்குகிறது.
தமிழ் மூலத்தைக்கொண்ட மேற்கத்தியச் சொற்களாகிய அரிசி, சர்க்கரை, இஞ்சிவேர், கறி ஆகிய சொற்களுடன் சேர்க்கப்படவேண்டியது குருந்தமும்தான்.
யவனர்களைப் பற்றியும் அவர்களின் வாணிபத்தைப் பற்றியும் சோமு
விபரமாகச் சொல்லியிருப்பார்.
யவனர்கள், இந்த நீலக்கல் ஆகிய விஷயங்கள் எப்படியோ என்னுடைய மனதிற்குள் முகுந்து எங்கோ ஆழத்தில் ஒட்டிக்கொண்டு கிடந்தது.
ரொம்ப நாள் கழித்து.... ரொம்ம்ம்ப்ப்ப நாள் கழித்து.......
நான் மலேசியாவுக்கு வந்த பிறகு மலாயாவின் கிழக்குப் பகுதி
மாநிலங்களில் வேலை பார்த்துவிட்டு, 1984-இல் மேற்குப் பகுதியில் உள்ள
சின்ன ஸ்டேட் ஆகிய பெர்லிஸ¤க்கு வந்தேன்.
அதெல்லாம் பழங்காலத்திலிருந்த கடார நாட்டின் பகுதியாக இருந்தது.
இப்போது தனி ஸ்டேட்டாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் கெடாஹ்
ஸ்டேட்டின் பகுதியாக இருந்ததுதான்.
இந்தக் கெடாஹ் ஸ்டேட்தான் பழங்காலத்தில் கடாரமாக இருந்தது.
கெடாஹ்வில் புஜாங் பள்ளத்தாக்கு என்ற இடம் இருக்கிறது. இங்கு
பழைய சின்னங்கள் இருக்கின்றன. ஒரு மியூஸீயமும் இருக்கிறது.
அந்த மியூஸீயத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.
1989-இல் கெடாஹ் ஸ்டேட்டின் தலைநகராகிய அலோர் ஸ்டாருக்கு
வந்துவிட்டேன்.
1990-இல் இப்போது நான் வசிக்கும் சுங்கைப் பட்டாணிக்கு வந்து
விட்டேன்.
சுங்கைப்பட்டாணிக்கு மிக அருகில்தான் புஜாங் இருக்கிறது. ஆகவே
அடிக்கடி சென்று ஆராய்ந்து வந்தேன்.
நாளடைவில் "கடாரம் என்றாலே அதைப் பற்றி அதிகம் தெரிந்த
ஆள் ஜேய்பிதான்" என்ற அளவுக்குப் பெயர் வாங்கினேன்.
2000-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் சார்பாக இந்த வட்டாரத்திற்கு
வந்த இந்தியர்களைப் பற்றி ஒரு டாக்குமெண்டரியை செய்வதற்காக
ஒரு டீம் வந்தது. அந்த டீமுக்குத் தலைவி பெரெய்ரா என்னும் கோவாக்காரப்
பெண்.
மியூஸியத்துக்குப் போனோம். அங்கு பல வீடியோ ஷ¥ட்டிங்
செய்தார்கள்.
அங்குள்ள எக்ஸிபிட்களைக் காட்டிக்கொண்டிருந்தபோது மணிக்கற்கள்
இருந்த பகுதியையும் காட்டினேன்.
அந்த நீலக்கல்லைப் பற்றிச் சொன்னேன். அவை தமிழ் நாட்டில்
மட்டும்தான் கிடைக்கும். இந்தக் கற்கள் அங்கிருந்துதான் வந்தன.
யவனர்கள் இந்தக் கற்களை அதிக விரும்பினர். யார் கடாரத்துக்குக்
கொண்டு வந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை", என்றேன்.
அந்தப் பெண் அந்தக் கற்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்
ஒரு மாதிரி வெறித்த பார்வை.
அப்போது சொன்னார், "நான் இதே கற்களைத் தமிழகத்தில்
அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார்.
அரிக்கமேட்டில் அகழ்வாராய்ச்சிகள் ரொம்ப காலமாகச் செய்து
கொண்டிருந்தார்கள். அங்கு ரோமன் குடியிருப்புகள் இருந்தன. அந்த
இடத்திலும் இதே மாதிரி நீலமணிகள் இருந்தன.
யவனர்கள் நீலமலையிலிருந்து அந்த மணிக் கற்களை வாங்கி
வந்திருக்கிறார்கள்.
அதே நீலமணிக் கற்கள் கடாரத்திலும் புஜாங் மியூஸீயத்தில் வைக்கப்
பட்டிருந்தன.
சோமுவின் வெண்ணிலவுப் பெண்ணரசியில் நான் படித்த அந்த
நீலமலை- குருந்தங்கல் விஷயம் மனதில் ஒட்டிக்கொண்டது என்னுடைய
கடார ஆராய்ச்சிக்கும் மிஸ் பெரெய்ராவின் டாக்குமெண்டரிக்கும் மிகவும்
உதவியாக இருந்தது.
நீலமலை - அரிக்கமேடு - கடாரம் கனெக்ஷன் எஸ்டாப்லிஷ்
ஆகி உறுதியாகியது.
அன்புடன்
ஜெயபாரதி
குருந்தம் என்பது அலுமினியம் ஆக்சைடின் (Al2O3) அடர்ந்த படிவமாகும். (இதைக் குருவிந்தம் என்றுந் தமிழிற் சொல்வதுண்டு.) இந்தப் படிவம் தமிழ்நாட்டில் ஏர்க்காட்டிற்கு அருகில் சேர்வராயன் மலையிலும், நாமக்கல்லிற்கு அருகில் கொல்லிமலையிலும், திண்டுக்கல்லுக்கு அருகில் கொடைக்கானல் மலையிலும் இருக்கும் பாக்சைட் என்னும் அலுமினிய மூலப்பொருளின் ஊடே கிடைக்கிறது. இந்தப் படிவத்தின் ஊடே இருக்கும் மாசைப் பொறுத்து குருந்தக்கல்லின் நிறம் மாறும்.
இதில் குரோமிய (chromium) மாசு இருந்தால் சிவப்பும் செந்நீலமும் என நிறங்கொள்ளும். சிவப்பு நிற குருந்தக் கல்லைத்தான் ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று சொல்கிறார்கள். தமிழில் மாணிக்கம் என்று சொல்கிறோம். (கண்ணகியின் சிலம்புள் மாணிக்கப் பரல்களே இருந்தன. பாண்டிமாதேவியின் சிலம்புள் முத்துப் பரல்கள் இருந்தன.)
இதில் இரும்பு மாசு இருந்தால் நீல நிறம் கொள்ளும். அதை சவையர் (sapphire) என்பார்கள்.
இதில் தைத்தானியம் (Titanium) இருந்தால் மஞ்சள் நிறங்கொள்ளும்.
செம்பு இருந்தால் ஆரஞ்சு நிறங்கொள்ளும்.
மக்னீசியம் (Magnesium) இருந்தால் சற்று பசியநிறங் காட்டும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் வடகரையின் அருகில் கொடுமணலில் (சங்க காலத்திற் கொடுமணம் என்று பெயர்) மணிகளைப் பட்டைத்தீட்டும் தொழிலும், மெருகு கொடுக்கும் தொழிலும் நடந்திருப்பது பேரா. கா.இராசனின் அகழாய்வாற் தெரியவந்திருக்கிறது. எனவே யவனர் - தமிழர் பரிமாற்றத்தில் கொடுமணமும் ஊடே வந்திருக்கலாம்.
குருந்தம்/குருவிந்தம் என்ற சொல் அதனுடைய கனமான தன்மையாலும், ஒளிபெறுந் தன்மையாலும் ஏற்பட்டிருக்கவே வாய்ப்புண்டு. (பசுமட் குரூஉத் திரள் போல” புறநா.32).
Because of corundum's hardness (pure corundum is defined to have 9.0 Mohs), it can scratch almost every other mineral. It is commonly used as an abrasive on everything from sandpaper to large machines used in machining metals, plastics, and wood. Some emery is a mix of corundum and other substances, and the mix is less abrasive, with an average Mohs hardness of 8.0.
In addition to its hardness, corundum is unusual for its density of 4.02 g/cm3, which is very high for a transparent mineral composed of the low atomic mass elements aluminium and oxygen.
என்று ஆங்கில விக்கிப்பீடியா சொல்லும்.
குருந்தம்.குருவிந்தம் பற்றிய ஆய்வை வரலாற்றுத் தொடர்போடு சீராக ஆய்வு செய்தவர் நானறிய யாருமில்லை. எதிர்காலத்தில் யாராவது செய்தாற் பயனுண்டு.
அன்புடன்,
இராம.கி.