In those glorious days of yore, there were three crowned kings in
Tamilnadu - Chera, Cholza, and Pandya. And there were 18 vELir chieftains
who were ruling over their own domains. Apart from them, there were the Maans - like Adhiyamaan, ThoNdaimaan, and Malaiayamaan and other other
minor chieftains.
This was the situation about 1900 years ago.
This was well before the advent of the Kalabra, Muthairaiyar, Pallava,
and Bana tribes from elsewhere. These became rulers after sometime. But during the 7th century, the Pallavas and the Pandyas became the chief
rulers with small empires and had the Cholzas, Cheras, Muththaraiyars,
VELirs, Banas, the various Maans, etc., under them.
Then in the 10th century, everything turned topsy turvey and the Cholzas vanquished the Pallavas, subdued the Pandyas and Cheras and other rulers and ruled over the whole of Tamilnadu and parts of southern Andra, and Karnataka and built an empire.
Among the Cholza dynasty, there was Kuloththunga II. He was so
peace-loving and did not wage any wars against anyone, that he was known
as Abhayan and Anabhaayan. 'He Who Gives Refuge From Fear' and 'He Who
Does Not Cause Any Danger'.
In those days, it was the custom of the kings to have Royal Poets who adorned their courts. Some held the rank of Poet Laurate or chief poet.
Kuloththunga had Ottakkuuththar as his chief poet. Kuuththar had a title, 'Kavi Chakravarththi' - "An Emperor Among Poets". In addition, Kuuththar was also the Teacher of 3 generations of Cholza Emperors.
The Cholza took a bride from the Pandyas. At that time, the Pandya king was a subordinate to the Cholza emperor.
It was customery for royal princesses to bring a large dowry of cash and kinds. In addition, they also brought their own retinue called 'Aga-Parivaara
MakkaL'.
In the case of our Pandya princess, she had a peculiar request.
She asked her father, the Pandya king to send the chief royal poet of the
Pandyas - Poet PugalzEndhi.
The Pandya was aghast. To part with his highly esteemed Poet Laurate
was unthinkable.
The princess, then, refused to go to Cholza country without PugalzEndhi.
THe Pandya king had to send Pugalzendhi along with the princess.
The Pandyan princess brought the Royal poet in her entourage. He was
staying at the court of the Cholza.......
இது வரலாற்றில் நடக்காத கதை. கற்பனை. இதன் அடிப்படை ஏதாவது
இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஆதாரங்களும் கிட்டவில்லை.
சோழர்கள் சோழப் பேரரசை ஆண்ட காலம்.
ஏதோ ஒரு குலோத்துங்க மன்னன் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சோழப் பேரரசில் அப்போது சோழநாடு, தொண்டை நாடு(பழைய பல்லவம்), நடுநாடு,
மலை மண்டலம், சேரநாடு, கொங்கு, குடகு, பாண்டியநாடு ஆகியவை
இருந்தன.
சோழநாட்டின் தலைநகரம் அப்போது கங்கைகொண்ட சோழபுரம்.
அந்தக் காலத்தில் சோழமன்னர்கள் ஒவ்வோர் அரச பரம்பரைக்கும்
ஒவ்வொரு எடுத்து மணம் செய்துகொள்வார்கள். Dynastic Marriage என்று
சொல்வார்கள். ராஜராஜ சோழருக்கு அந்தவகையில் பதினைந்து தாரங்கள்
இருந்தனர்.
தலைமுறைக்குத் தலைமுறை பாண்டிய குலப்பெண்களை மணம் செய்தல்
ஒரு மரபாக இருந்தது.
குலோத்துங்க சோழர் அவ்வகையில் பெண் கெட்டு, பாண்டியரும் பெண்
கொடுத்தார்.
அந்தப் பெண்ணுக்குச் சீர்வரிசை செய்யும்போது அக்கால வழக்கப்படி ஆள், அம்பு, மெய்க்காவல், பரிவாரம், போன்ற ஒரு பட்டாளத்தையே பாண்டியர்
அனுப்பிவைத்தார்.
இது எல்லா நாடுகளிலும் இருந்தது.
மலேசியாவில் இருந்த மலாக்கா அரசனுக்குச் சீன தேசத்து அரசகுமாரி
ஒருத்தியை மணம்பேசி, அவளைப் பெரிய கப்பல் படையுடன் சீனச்
சக்கரவர்த்தி அனுப்பிவைத்தார்,
அந்த இளவரசி ஹாங் லிப்போ, தன்னுடன் எழுபத்தைந்து பேர் அடங்கிய
பரிவாரத்தைக் கூட்டிவந்தாள்.
நம்ம பாண்டிய இளவரசி தம்முடைய பரிவாரத்தில் உள்ள நபர்களை
அவளே தேர்ந்தெடுத்தாள். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்.
சீர் செனத்தி பரிவாரங்களுடன் அவளுடைய ஆசானும் பாண்டியரின் அவைக்களத்துத் தலைமைப் புலவருமாகிய புகழேந்தியையையும்
அனுப்புமாறு கேட்டாள்.
பாண்டியர் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் வேறுவழியில்லாமல் அனுப்பிவைத்தார்.
சோழநாட்டில் குலோத்துங்க சோழரின் ஆசானாக விளங்கியவர் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.
The Cholza's praeceptor and the Poet Laurate, Otta Kuuththar was a poet who was gifted with Saaraswathyam - the full Grace of Goddess Sataswathi,
the Goddess of Learning, Letters, Poesy, and Wisdom.
His name is Kuuththan. People used to call him as Kuuththanaar or Kuuththarpiraan, or Kuuuththar Peruman. Because he commanded great respect. In fact more respect than the Cholza Emperor himself. The Emperor never crossed his words.
His name obtained an honoric prefix - 'Otta', because he cut the heads
of 72 KaikoLars, made a Simmhasanam of their heads and sang a special
literary piece dedicated to Goddess Saraswathi - the Iitti Elzupadhu, and then
put the heads to the bodies, stuck them, and raised the Kaikolars to life. Baceause he stuck the heads back to the bodies and redeemed the Kaikolar
to life, he was hailed as the 'Otta' Kuuththar.
In due course, Kuuththar developed an intense rivalry against PugalzEndhi.
One day, he sang a poetry belonging to the class of Ammanai.
He taunted the Pandya poet by challanging him whether the Royal Horse
of the Pandya - KOram was equal to the Royal Horse of the Cholzas - Ganavattam.
In those days, the insignia and royal paraphernalia included the Simhasana - the throne, the royal Parasol-umbrella, Whisk, fan, silver mace of command, banners, flags, royal drums, the sword, the dagger, the crown, the royal palanquin, the royal horse, the royal elephant, the royal ship/boat, the royal chamberlain, the private squad of personal body guards and the kings own private vELam of women. The Royal paraphernalia and personnages totalled
thiry-two in number. I have only enumerated those that came to mind.
Among these was the royal horse......
I was mentioning about the Royal insignias and paraphernalia of the
ancient Tamil kings.
We can find a small list about these in a rare thani paadal - an individual verse.
There was a great warrior called Ekamba VaaNan. He belonged to the
clan of VaanNar or Banas. The Banas originated in present day Iran and
migrated to India. In India, because of their great warrior qualities, they
were occupying important positions in various kingdoms. While doing so, they migrated south and in the process, became minor kings who were feudatories
to other kings.
Finally they came to South India.
According to the legend of EkambaVaaNan, they must have become very powerful.
Ekamba Vaanan became so very powerful and conquered the three
crowned kings of Tamilnadu - The Chera, Pandya and Cholza.
The legend says that the VaaNan defeated the three kings and captured
all the royal paraphernalia of the three kings and just heaped them up in the courtyard of his castle.
The VaaNan distributed them among the poets who came to sing and
praise his valour.
The three kings were led inside the castle in chains.
While passing the courtyard, they saw their paraphernalia being possessed
by various poets.
The kings were aghast and each king went about identifying each of them and declaring them as their own objects.
The poem runs like this.....
enkavigai en sivigai en kavasam en thuvasam
en kari iidhu en pari iidhu enbarE -mankavana
maavEndhan Ekamba VaaNan parisu peRum
paavEndharai vEndhar paarththu.
"This is my palenquin. This is my parasol. This is my armour. This is my flag.
This is my elephant. This is my horse" - thus claim the three kings when they
see the poets who were rewarded with these objects by Ekamba VaaNan
who captured the lands".
நளவெண்பாவைப் பாடி முடித்தவுடன் புகழேந்தி விடுதலை அடைந்தார்.
குலோத்துங்கர் அவரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்தார். இருவரையும்
ஒன்றாக வைத்துக்கொண்டு, "நீங்கள் இருவருமே இப்படி விரோத மனப்
பான்மையுடன் இருப்பது நல்லதாகத் தெரியவில்லை. உங்களுக்கு நிகராக
யாருமே இல்லை. ஆகவே இருவருமே ஒத்த மனப்பான்மையுடன் இருந்தால் உலக்த்துக்கே நல்லது", என்றார்.
இருவருக்கும் அது சரியாகப் பட்டது.
"ராசா கைய வச்சா....அது பாசா ஆகிரும்ங்க" என்பது அந்தக் காலத்திலேயே
அசைக்கமுடியாத உண்மையாக இருந்திருக்கிறது.
திருநெய்த்தானம் என்னும் திருத்தலம் ஒன்று இருக்கிறது. அது தேவாரப்
பாடல் பெற்ற ஸ்தலம். நெய்யாடியப்பர் என்னும் பெயரில் பாலாம்பிகையுடன்
சிவபெருமான் இருக்கும் திருக்கோயில்.
குலோத்துங்கர் அந்தத் திருக்கோயிலுக்கு ஒட்டக்கூத்தரையும்
புகழேந்தியையும் அழைத்துச் சென்றார்.
"பறையும்பழி பாவம்படு துயரம்பலதீரும்" என்ற சிறப்பை வைத்துத்
திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
பழி பாவங்கள் யார் செய்திருப்பினும் தீரவேண்டும் என்று குலோத்துங்கர்
நினைத்திருக்கலாம்.
இருவரையும் திருநெய்த்தான ஈசரைச் சிறப்பித்து ஆளுக்கொரு பாடலைப்
பாடுமாறு குலோத்துங்க சோழர் கேட்டுக்கொண்டார்.
"பேயாயின பாடப் பெருநடமாடிய பெருமான், வேயாகிய தோளிக்கொரு
பாகம் மிக வுடையான்.... சுடுநீறணி யண்ணல் சுடர்சூலம் அனலேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன் உறையிடமாம்...."
இந்தக் கருத்தை உள்வைத்து முதலில் ஒட்டக்கூத்தர் பாடினார்.....
விக்காவுக்காவித்தாவிப்போய்விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்காயத்தாசை பாடுற்றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய் தொக்காடச் சூழப்பாடத் தீவெப்பாடப் பூண்
நெக்காடக் கானத்தாடப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே
அடுத்து புகழேந்தியார் பாடினார்......
தற்கோலிப்பூசற்பாசத்தே தப்பாமற்சாகைக்கே நிற்பீர்
முற்கோலிக்கோலிப்பூசித்தே முட்டாமற் சேவித்தே நிற்பீர்
வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூகத்தேறித் தாவிப்போய்
நெற்றாலுற்றாலைப்பாகிற்சேர் நெய்த்தானத்தானைத் தியானித்தே
அடிப்படையான கருத்து இருவர் பாடியதிலும் ஒன்றுதான்.
"அது இது எது எல்லாத்தையும் விட்டுட்டு நெய்த்தான ஈசனைச்
சேவியுங்கள்; தியானியுங்கள்".
இந்தப் பாடல்களின் பொருள்...
அன்புடன்
ஜெயபாரதி
ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் பாடிய இந்தப் பாடல்கள்
பல வித்வான்கள் பாடிய தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலின் முதற்பாகத்தில்
காணப்படுகின்றன.
இதன் மூலநூலில் காணப்படும் பாடல்கள் தில்லையம்பூர் சந்திர சேகரக்
கவிராஜ பண்டிதரால் சேகரிக்கப்பட்டவை. இவற்றைக் காஞ்சிபுரத்துக் கச்ச
பாலைய ஐயர் என்பவர் பரிசோதித்துச் சரிபார்த்து முதல் பதிப்பு வெளியிடப்
பட்டது. அந்த பதிப்பை தமிழ் அறிஞர் திருமயிலை சண்முகம் பிள்ளை மேலும்
சரிபார்த்து, புதிதாக இன்னும் சில பாடல்கள் அதில் சேர்க்கப்பட்டு, இராமநாத
புர சமஸ்தானத்து அரசர் சேதுபதியின் அண்ணனும் சமஸ்தான நிர்வாகியுமான
பொன்னுச்சாமித் தேவர் அவர்களின் ஆணைப்படி மீண்டும் புதிதாக 1940-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது.
அதே சமயத்தில் தனிப்பாடல் திரட்டு தமிழ்ப் பேராசிரியர், தாகூர் சட்ட
விரிவுரையாளர் கா.சுப்பிரமணிய பிள்ளையால் 1939-ஆம் ஆண்டில் உரை எழுதப்பெற்று இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு அதன் பதிப்பு 1957-ஆம் ஆண்டில் வெளியாகியது.
இப்போது காசுப் பிள்ளை என்று அன்பாக அழைக்கப்பட்ட சட்ட நிபுணரும்
சட்டநூல் இயற்றியவருமான கா சுப்பிரமணிய பிள்ளை என்னும் தமிழ் பேரறிஞர்
எழுதிய உரையைத்தான் இங்கே முன்வைக்கிறேன்........
விக்காவுக்காவித்தாவிப்போய்விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்காயத்தாசை பாடுற்றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய் தொக்காடச் சூழப்பாடத் தீவெப்பாடப் பூண்
நெக்காடக் கானத்தாடப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே
விக்கா-விக்கி
உக்கு - தளர்ந்து
ஆவித் தாவிப் போய் விட்டால் -உயிர் உடலைக் கடந்து போய்விட்டால்
நட்டார் - உறவினர்
சுட்டு ஊர் புக்கார் - பிணத்தைத் தகனம் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர்
இக்காயத்து ஆசைப் பாடுற்றே - இந்த இயல்புடைய உடம்பில் பற்று வைத்து
இல் தேடிப் போய் வைப்பீர் - செல்வத்தைச் சம்பாதித்து வீட்டில் கொண்டு
போய் வைப்பவர்களே
அக்காட - தாம் அணிந்திருக்கும் எலும்பு மாலை அசையவும்
பேய் தொக்காட - பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும்
சூழ் அப்பு ஆட - சடையில் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும்
தீ வெற்பு ஆட - திருக்கையில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு
அசையவும்
பூண் நெக்கு ஆட - காதில் அணிந்திருக்கும் அணிகள் நெகிழ்ந்து
அசையவும்
அக்கானத்து ஆடு - அந்தச் சுடுகாட்டினிடத்தில் நடனம் செய்கின்ற
அப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே - அந்தப் பெருமை பொருந்திய
நெய்த்தானம் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு
நிற்பீர்- நிலையான கதியைப் பெற்றுய்வீராக
புகழேந்தியார் பாடிய பாடல் -
தற்கோலிப்பூசற்பாசத்தே தப்பாமற்சாகைக்கே நிற்பீர்
முற்கோலிக்கோலிப்பூசித்தே முட்டாமற் சேவித்தே நிற்பீர்
வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூகத்தேறித் தாவிப்போய்
நெற்றாலுற்றாலைப்பாகிற்சேர் நெய்த்தானத்தானைத் தியானித்தே
தன் கோலி - தன்னைச் சுற்றியிருப்பதாகிய
பூசல் பாசத்தையே தப்பாமல் - சண்டையிடும் பாசங்களினிடையே அகப்பட்டு அவற்றினின்று விலகிப்போகாமல்
சாகைக்கே நிற்பீர் - மரணமடைதற்கே தகுதியாயிருப்பீர்கள்
(நீங்கள்)
முற்கோலி - முன்னதாகவே ஆயத்தமாக
வட்டா நெற்றோடே - வற்றிப்போகாத நீண்ட கால்வாய்களிலுள்ள
பாரைச்சேல் - பெரிய சேல் மீன்கள்
மைப்பூகத்து ஏறித் தாவிப்போய் - கரிய மேகத்தைத் தொடக்கூடிய உயர்ந்த
பாக்கு மரத்தில் பாய்ந்து சென்று
நெல் தாள் உற்று -நெற்கதிரின் அடியில் சேர்ந்து
ஆலைப்பாகில் சேர் - ஆலையிலிருந்தெடுத்துக் கொதிக்க வைக்கப்படும் கருப்பஞ்சாற்றில் கலக்கின்ற
நெய்த்தானத்தானைத் தியானித்து - நெய்த்தானப் பெருமானை மனதில்
நினைத்து
கோலிப் பூசித்தே - பூசைக்கு வேண்டுவன தயார் செய்து பூசனை புரிந்து,
முட்டாமல் சேவித்தே நிற்பீர் - தவறாமல் வழிபட்டு நிலையான கதியைப்
பெறுவீர்களாக
அன்புடன்
ஜெயபாரதி
செவிவழி மரபில் வழங்கிவரும் பல கதைகளில் புகழேந்தி/ஒட்டக்கூத்தர்
போட்டபோட்டியும் ஒன்று. இந்த மாதிரி கதைகளுக்குச் சான்றுகள் இருப்பதில்லை.
குறிப்பாக ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள்
போல் தோன்றுகிறது.
இருவரும் போட்டிபோட்டுப் பாடியதாகச் சொல்லப்படும் பாடல்கள் சில
கிடைக்கின்றன.
ஒருமுறை ஒட்டக்கூத்தர், தன்னுடைய தலைவன் சோழமன்னனின்
பெருமைகளைச் சொல்லவேண்டும் என்பதற்காக வெண்பா ஒன்றைப்பாட
ஆரம்பித்தார்.
சோழமன்னனே சக்கரவர்த்தி; அவனுக்கு அடங்கியவன் பாண்டியன்.
இருப்பினும் சோழனைவிடப் பாண்டியனின் குடிப்பெருமையே பெரிதாகவும்
அதிகச் சிறப்புமிக்கதாகவும் கருதப்பட்டது. ஏனெனில் பாண்டிய நாடே
'செந்தமிழ்நாடு' எனப் பெயர் பெற்றது. 'பாண்டிப்பதியே பழம்பதி' எனவும்
பாண்டியரைத் 'தொல்குடி' என்றும் சொல்வழக்கு இருந்து வந்தது. பாண்டியருக்கே 'வணங்காமுடி' என்ற பட்டமும் இருந்தது.
ஆனாலும் சக்கரவர்த்தியோ சோழன்; பாடுபவரோ கவிச்சக்கரவர்த்தி
ஒட்டக்கூத்தர். யார், எப்படி, என்னத்தைச் சொல்லமுடியும்?
ஆகவே பாடினார் ஒட்டக்கூத்தர். தம் தலைவனாகிய சோழன், தன்
மார்பில் மட்டுமே கவசம் தரிப்பான். முதுகுப் பக்கம் கவசம் அணியமாட்டான்.
ஏன் என்று அவர் நேரிடையாகக் காரணம் கூறவில்லை. அதில் அந்தக் காரணம்
விரவி நிற்பதுபோல் அமைத்தார். ஒருவேளை அடுத்து, அதனைப் பாடி
வெண்பாவை முடித்திருப்பாரோ, என்னவோ. எது எப்படியிருப்பினும், கருத்து என்னவென்றால் 'சோழன், போரின்போது தன் மார்பை மட்டுமே காட்டிப்
போரிடுவான். மறந்தும் முதுகைக் காட்டமாட்டான். அப்படிப்பட்ட வீர
பராக்கிரமம் மிகுந்தவன்,' என்பதுதான். ஆகவே தன் முதுகுக்குக் கவசம்
இடமாட்டான். தேவையில்லை என்பது கருத்து.
"வென்றி வளவன் விறல் வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக்கிடான் கவசம்..."
அசரவில்லை புகழேந்தி.
மிகுதி வெண்பாவில் தம்முடைய சொந்தக் கருத்துப் புலப்படும் வண்ணம் வெட்டிப் பாடி வெண்பாவை முடித்துவைத்தார்.
"-துன்றும்
வெறியார் தொடை கமழும் மீனவர்கோன் கைவேல்
எறியான் புறம்கொடுப்பின் என்று!"
சோழன் ஏன் தன் முதுகில் கவசம் தரிப்பதில்லை, தெரியுமா? அவனை
வெல்லக் கூடியவன் பாண்டியன் ஒருவனே. பாண்டியனிடம் மட்டுமே சோழன்
புறமுதுகிடுவான். ஆனால் பாண்டியனோ தன்னிடம் தோற்றுப் போய் ஓடி,
புறமுதுகிடுவோரைப் பின்புறமிருந்து வேலெறிந்து தாக்கமாட்டான். இந்த
விஷயத்தை நன்கு அறிந்தவன் சோழன்.
முதுகுக்குக் கவசம் தேவையில்லை; ஏன்? பாண்டியன் முதுகில் குத்த
மாட்டான். அதனால்தான் சோழன் தன் முதுகுக்குக் கவசம் இடவில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
இப்படிப் பாடினால் எதிர்வினை இருக்குமா இல்லையா. இருந்தது.
எதிரான வினையாக விளைந்தது.
அன்புடன்
ஜெயபாரதி
ஒட்டக்கூத்தர் பாடியதைப் புகழேந்தி வெட்டிப் பாடினதைச் சொன்னேன்.
இதைக் கேட்டதும் குலோத்துங்க சோழர் வெகுண்டு புகழேந்திக்குத்
தக்க தண்டனை கொடுக்க நினைத்தார்.
அக்காலத்தில் மான்னனைப் பழித்துச் சொல்வது என்பது கடுமையான
குற்றமாகக் கருதப்பட்டது.
பெரும்பாலும் தோலை உரிப்பார்கள். அல்லது கழுவில் ஏற்றுவார்கள்.
சித்திரவதைகள் செய்வார்கள். இழித்துப் பழித்துப் பாடிய நாக்கை அறுப்பார்கள்; அல்லது நாக்கில் சூடு போடுவார்கள். அல்லது கூரத்தாழ்வானைப் போல
கண்ணைக் குருடாக்கிவிடுவார்கள். போனால் போகிறதென்று காருண்யம்
காட்டுவதானால் தலையை மட்டும் வெட்டுவார்கள்.
அப்படித்தான் குலோத்துங்க சோழர் நினைத்திருப்பார்.
என்ன இருந்தாலும் புலவர் அல்லவா? அதுவும் பாண்டியரின் அவைக்
களத்துத் தலைமைப் புலவர். போதாததற்கு ராணியின் பரிவாரத்தைச்
சேர்ந்தவர்.
ஆகவே ஒட்டக்கூத்தரின் யோசனைப் படி சிறையில் அடைத்துவைத்தார்.
ஒரு கதையின்படி பட்டினியும் போட்டார்கள் என்று இருக்கும்.
புகழேந்தி சும்மா இருக்கவில்லை.
மிகவும் கஷ்டமான காலத்தைக் கடப்பதற்கு உரிய பரிகாரமாக அவர்
நிஷத நாட்டு மன்னனாகிய நளச் சக்கரவர்த்தியின் கதையை அப்படியே
வெண்பாவாகப் பாடினார். 'நளவெண்பா' உருப் பெற்றது.
ஒட்டக்கூத்தர் தப்புத் தப்பாகக் கவி பாடுபவர்களைச் சிறையில் அடைத்து
வைப்பார். மூன்று பேரின் குடுமிகளை ஒன்றாக முடிந்துவைத்து ஒரே வீச்சில்
மூன்று தலைகளையும் அவருடைய கை வாளால் வெட்டிவிடுவார்.
இதில் ஒரு சூட்சுமம், மர்மம், ரகசியம் இருக்கிறது.
ஆக தக்கயாகப் பரணி பாடிய ஒட்டக்கூத்தர் அடைத்து வைத்திருந்த புலவர்கள், நாவிதர், கொல்லர் போன்றவர்களுக்குத் திருத்தமாகக் கவி
பாடுவதற்குப் புகழேந்தி சொல்லிக்கொடுத்தார்.
ஒட்டக்கூத்தர் சிறைக்கு வந்து பார்க்கும்போதெல்லாம் நாவிதப் புலவர்,
கொல்லப் புலவர் முதலிய அனைவரும் அவரைக் கலாய்த்து, கண்டதனமாகக்
கவி பாடி அவமானப்படுத்தினர்.
இதைப் பொறுக்க முடியாத ஒட்டக்கூத்தர், புகழேந்தியை விடுவிக்கச்
செய்தார்.
நளவெண்பா பாடிய முகூர்த்தம்..... அது தக்க பலனை ஏற்படுத்தி,
புகழேந்திக்கு விடுதலையைத் தந்தது.
இருவரையும் குலோத்துங்க சோழர் அழைத்தார்......