Wednesday, October 23, 2013

கடைச்சங்க சங்கநூல்கள்

அன்பர்களே,

இந்த விபரத்தை நான் ·பேஸ்புக்கில் போடவேண்டி எழுதினேன். 
அகத்தியர் குழுவுக்கும் ஆகும் என்றெண்ணி இங்கும் போடுகிறேன். இங்கு 
தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு இதெல்லாம் 
மறந்துபோயிருக்கக்கூடும்.
நம்ம இளைய தலைமுறைக்கும் இதைச் சொல்லலாம் அல்லவா?

கடைச்சங்க சங்கநூல்கள் என்பன பதினெட்டு. இவற்றைப் 'பதினெண்மேல்
கணக்கு' என்றும் புலவர்கள் வழங்கியதுண்டு.
எட்டுத் தொகை நூல்களும் பத்துத் தனிப்பாட்டுகளும் இவை.
இந்த நூல்களின் பட்டியலை நினைவில் வைத்துக்கொள்வதற்காக இரண்டு 
தனிப்பாடல்கள் இருக்கின்றன. 

எட்டுத்தொகை பற்றிய பாடல் - 

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம்,புறம், என்று
இத்திறத்த எட்டுத் தொகை

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

இதே போன்ற இன்னொரு பாடல், பத்துப் பாட்டைப் பற்றி கூறும்.

முருகு, பொருநாறு, பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி,-மருவினிய
கோல நெடுநல் வாடை, கோல்குறிஞ்சி, ப்பட்டினப்
பாலை, கடாத்,தொடும் பத்து

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment