Friday, July 19, 2013

சும்மா

சில அன்பர்கள் என்னை வந்து பார்த்தபோது மந்திரங்களைப் பற்றியும் நிறைய
கேட்டார்கள்.
அவர்கள் கேட்டது அம்பிகை சம்பந்தமான மந்திரங்களைப் பற்றி.
பொதுவாகவே மந்திரங்களில் பலவகையுண்டு.
பெண் தேவதைக்குரிய மந்திரம், ஆண்தேவருக்குரிய மந்திரம் என்பது
மாத்திரமல்ல.
ஆண் பெண் மந்திரங்கள்கூட உண்டு.
ராஜமந்திரம் என்றவகையுண்டு.
நரசிம்ம மந்திரம் என்பது ஒரு ராஜமந்திரம்.
இதையெல்லாம் செய்வதற்கு தனிப்பட்ட விசேஷ ஆசாரங்கள் அனுஷ்டானங்கள்,
நியமங்களெல்லாம் உண்டு.
ஆசாரம், நியமம் என்றால் நம்ம ஆட்கள் எப்போதுமே சைவமாகச் சாப்பிடுவது, குளிப்பது, கால்கை கழுவுவது, பஞ்சகச்சம் வைத்துக் கட்டுவது, இடுப்பில் துண்டு கட்டுவது, கொட்டை, பட்டை அணிதல், சடங்குகளை ஏராளமாக இணைத்துச் செய்வது போன்றவற்றில்தான் கவனத்தையும் செலுத்துகிறார்கள்; அவற்றையே
வலியுறுத்துகிறார்கள். அவை மட்டும் போதாது.
மனதில் உறுதி, வினைத்திட்பம், தீர்க்கமான கவனம், அலையாத, நிலைத்த மனம், ஒருங்குசேர்த்து இலக்கில் மட்டுமே செலுத்தப்படும் மனம், தேவையானவற்றை மட்டுமே பார்க்கும் பார்வை.....இப்படி பல விஷயங்கள் உண்டு.
இவை இல்லாமல் ஆசாரம் என்ற போர்வையில் செய்யப்படும் செய்கையெல்லாமே வெறும் Charade என்று சொல்லப்படும் ஒருவகைக் கூத்தாக மாறிவிடும்.
லயிக்காத மனம் பிரயோசனமில்லை.
விக்கிரகம், படம், யந்திரம், மண்டலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு சில
காரணங்கள் இருக்கின்றன.
மனோலயம் ஏற்படவேண்டும் என்பதற்கும் அவை ஒரு காரணமாக அமையும். மனதை ஈர்ப்பதற்காக. கண்களுக்கும் பார்வைக்கும் இலக்கு, மனதுக்கும்
லயிப்பு.
இதை விட்டுவிட்டு வெறெதெல்லாமோ செய்துகொண்டிருப்பதில் பயனில்லை.
நட்ட கல், நட்ட கல்தான்.
உள்ளிருக்கும் நாதன் அந்தக் கல்லில் வரமாட்டான்.
முதலில் நாதனே உள்ளிருந்தால்தானே!
இதுதான் அடிப்படையே.

மனதைப் பற்றி நம் யோகநூல்கள் நிறையவே சொல்லியிருக்கின்றன.
இவை தவிர நேரடியாகக் கற்றலின்மூலமும் தானாகச் செய்யும் பயிற்சிகளின் மூலமும் அனுபவத்தின்மூலமும் மனதின் தன்மைகள், செயல்பாடுகள், இயக்கம்,
போக்கு முதலியவற்றை அறிந்துகொள்ளமுடியும்.

பல பொருள்களிலும் மனது செல்லும் நிலையை 'க்ஷ¢ப்தம்' என்று சொல்வார்கள்.

இயக்கமின்மை, சோம்பல், லயிப்பின்மை, கவனமின்மை முதலியவைகூடிய
நிலையை 'மூடம்' என்து சொல்வார்கள்.
அர்த்தம் மாறிப் போய் பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று.
"பலகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!" என்னும்போது இந்த
நிலையில் உள்ள மனதை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.

மனது சில சமயங்களில் வெளியில் கண்டதனமாகத் திரிந்துவிட்டு, சிற்சில சமயங்களில் உள்முகமாகவும் ஓடி ஒளிந்துகொள்ளும். இந்த நிலையை
'விக்ஷ¢ப்தம்' என்று யோகநூல்கள் கூறும்.

ஒரே இலக்கில் மனதை லயிக்கச்செய்து அதிலேயே நிறுத்திவைத்துக்கொள்வது 'ஏகாக்ரம்'.
யோகத்தில் மட்டுமல்லாது மார்ஷியல் போர்முறைகளிலும் 'ஏகாக்ரம்' மிகவும் \அவசியமானது.
அடுக்கி வைத்திருக்கும் செங்கற்களை உடைக்கும் வீரரைக் கவனித்துப்
பாருங்கள்.
ஒழுங்காகச் செய்யப்படும் மார்ஷியல் போரும் ஒரு யோகம்தானே.

மனதை முற்றிலுமாக இயக்கமின்றி ஆக்கி, நிறுத்தியோ அல்லது இல்லாமலோ செய்வதை 'நிருத்தம்' என்று யோகநூல் கூறும்.
யோகம் என்றால் என்ன? அதற்கு பதஞ்சலியார் சொன்னது:
"யோகாஸ் சித்த நிரோத:"
இல்லாமல் செய்வது நிரோதனம். 'நிரோத்' என்னும் பெயரும் இதே வேரைக்
கொண்டதுதான்.
மனதை இல்லாமல் செய்வது யோகத்தின் உச்சநிலை.

'சும்மா' என்றொரு தொடரை எழுதியிருந்தேன்.
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் அது முழுக்கட்டுரையாக இருக்கிறது.
 
 
 
சும்மா
#1


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
கடாரத் தமிழ்ப் பேரரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி





    ஒரு குறிப்பிட்ட ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது. அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது, அன்றாடப் படித்தரக் கணக்கு ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும் பட்டைச் சோறு பெறுபவர்களின் பட்டியலும் இருந்தது. அதில் ஓ¡¢டத்தில்,

"சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம் பட்டை ஒன்று" என்று இருந்தது.

    கட்டளைப் பண்டாரத்துக்குக் கோபம்.

    "ஏனய்யா? அதென்னைய்யா அது? 'சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரம்'? அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்?" என்று கேட்டார்.

    "அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான் இருப்பார். படிதரம் கொடுக்கச் சொன்னது பொ¢ய சந்நிதானம்." என்றார் கோயிலின் கா¡¢யஸ்தர்.

    மிக ஆத்திரமாக வெளியேறிக் கட்டளைத்தம்பிரான் நேரே பொ¢ய சந்நிதானமாகிய ஆதீனகர்த்தா¢டம் சென்று முறையிட்டார்.

    முடிவில்,
    "இதென்ன அக்கிரமமாயிருக்கிறது? சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம் சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது?" என்றார்.

    ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஒருவித மர்மப்புன்னகையுடன் அவரைப் பார்த்தார்.

    மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,
    "வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல், எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது. இரண்டு மணி நேரம். இது என் கட்டளை."

    ஐந்து நிமிடம்.... பத்து நிமிடம்.... இருபது நிமிடம்..... எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி கீழே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்.

    எழுந்தார்....
    ஓடினார்....
    ஓடினார்.....
    புலம்பிக்கொண்டே ஓடினார்.....
    "பேய்மனம்... பாழும் மனம்.... மனக்குரங்கு...."

    நேரே கோயிலுக்குச் சென்றார்.

    கணக்குச் சுவடியை எடுத்தார்.

    திருத்தி எழுதினார்.

    "சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப் படிதரம் பட்டை இரண்டு!"


    சும்மா#2

    அது சா¢.

    சும்மா இருப்பதில் அப்படியென்ன சிறப்பு?

    இந்த "சும்மா" என்ற சொல்லை நாம் பல பொருள்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த சொல்லை எனக்குத் தொ¢ந்து முதன்முதலில் பயன்படுத்திய பட்டினத்தாரும் அவரைத் தொடந்து வந்தவர்களும் யோகியரும் ஞானிகளும் முற்றிலும் வேறான பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இறைவனே குருவாக வந்து உபதேசம் தரும் பேறு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் கண்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனன், ஸ்ரீமன்நாராயணனிடம் அஷ்டாட்சரத்தை உபதேசமாகப் பெற்ற திருமங்கையாழ்வார்("தாயினமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்"); சிவனிடமிருந்து வாங்கிய மாணிக்க வாசகர்; வினாயகா¢டமிருந்து பெற்றுக்கொண்ட ஒளவையார் போன்றவர்கள். முருகனிடமிருந்து உபதேசம் பெற்றவர்களில் ஒருவர் அருணகி¡¢நாதர்.

    இளமையில் playboy ஆக விளங்கிய அருணகி¡¢, தொழுநோயால் அவதியுற்று, மனம் வெறுத்து, திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்தார்.

    அப்போது முருகன் ஓர் ஆண்டிக்கோலத்தோடு வந்து அவரை ஏந்தித் தாங்கிக் கொண்டார்.

    உயிரை வெறுத்திருந்த அருணகி¡¢ தாம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். முருகன் சொன்னது.....

    சுருக்கமான இரண்டே வா¢கள்....,

    "சொல்லற!
    சும்மா இரு!"

    அவ்வளவே.

    அதன் பொருளை அவரால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அவரால் இயற்றப்பட்டவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, மயில்விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்பு. இறுதியாக அவர் பாடியது கந்தர் அனுபூதி.

    அதில் அவருடைய ஆத்மானுபவங்களை 51 பாடல்களாக அப்படியே வடித்திருக்கிறார். ஐம்பத்தோராவது பாடலில் தம்முடைய குருவாகிய முருகனை நாடி,

    "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"

என்றவாறு பறந்து சென்று விட்டார்.

    பன்னிரண்டாம் பாடலில் அவர் பெற்ற உபதேசத்தைக் குறிப்பிடுகிறார்.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"

இது அருணகியார்.

    "சும்மாயிரு. சொல்லற" என்ற சொல்லின் பொருளை அறிந்துகொள்ளவே முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.

    அவர் மட்டுமா?
    பட்டினத்தாரும்தான்.

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"

                - பட்டினத்தார்

    சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.

"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"

    சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
    அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!

                - தாயுமானவர்

    மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

    ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

    அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!

    ஆளை விடு.

No comments:

Post a Comment