Friday, September 27, 2013

பராக்கு

பராக்கு' என்பது ஆழமான பொருள் கொண்ட சொல். ஆனால் சாதா
வழக்கிற்கு வந்துவிட்டது. 'சும்மா' என்னும் சொல் போல.
இச்சொல்லும் யோகநூலில் காணப்படுவதுதான்.
'பரா அக்' என்பது வெளிப்பார்வை.
'ப்ரத்யக்' என்பது உள்பார்வை.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில்,

'பரா ப்ரத்யக் சிதி ரூபா பச்யந்தி பரதேவதா
மத்யமா வைகரீரூபா பக்த மானஸ ஹம்ஸிகா'

என்ற மந்திரத்தொடரில் இந்த இரு சொற்களும் வருகின்றன.

தன்னையே அறிதல், மனதை நிலை நிறுத்தல், மனதை அழித்தல்
ஆகியவற்றைச் செய்வதற்கு பரத்யக் மிக அவசியம்.
கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கித்
தெள்ளியனாகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்.
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதி என்று
வெளிகினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே!

என்னும் பாடல் அப்பர் பெருமான் பாடியது. இதனை ஏற்கனவே விளக்கி
யுள்ளேன்.
இறைவனைத் தன்னுள்ளேயே அப்பர் பெருமான் கண்டு கொண்டார்.
ஆனால் அதற்கு முன் அவர் வெளியில்தான் இறைவனைத் தேடியிருக்கிறார்.
அவ்வாறு அவர் வெளிப்பார்வையாக பார்த்துக்கொண்டிருந்ததுதான்
பராக்கு.
அப்பேற்பட்ட சொல்!
இலக்கு இல்லாமல் வெளிப்பார்வை பார்ப்பதையும், விளையாட்டாகப்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதையும் 'பராக்கு'ப் பார்த்தல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லலாம்.
திருமந்திரத்தில்,

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேன் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே.

இந்தப் பாடலில் இரண்டாம் அடியில் வரும், 'பராக்கு அற' என்பதில்
பராக்கு வருகிறது.

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment