ப்ரஸ்ன தந்த்ரத்தின் மூலம் அது கிடைக்கக்கூடிய பாஸிபிலிட்டீஸை Possibilities அறிந்து கொண்டேன்.
நம் இந்து சமயத்தில் பேரருளாளர்கள் பாடிய சில பாடல்களுக்குப் பெரும் ஆற்றல் உண்டு.
அருணகிரிநாதர் பாடிய பல திருப்புகழ் பாடல்கள், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்புகள், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி ஆகியவற்றின் பாடல்கள் ஆற்றல் மிக்கவை.
இவற்றில் மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுபவை கந்தர் அனுபூதியின் பாடல்கள்.
அதில் உள்ள 51 பாடல்களுக்கும் யந்திரங்கள், பிரயோகமுறைகள், பூஜாவிதானம், பலன்கள் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
காணாமற் போன/திருட்டுப் போன பொருள் கிடைப்பதற்கு ஒரு பாடல் இருக்கிறது.
கந்தர் அனுபூதியின் பன்னிரண்டாம் பாடல்:
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மாபொருளொன்றும் அறிந்திலனே
இந்தப் பாடலுக்கு ஒரு மந்திரப் பிரயோகம் உண்டு. திருட்டுப்போன பொருட்கள் கிடைப்பதற்கு இந்தப் பாடலை உரிய முறைகளுடன் உருப் போடவேண்டும்.
அந்த சிங்கு எங்கே போய் உருப் போடப் போகிறார்?
ஆகவே அவருக்காக நானே உருவேற்றினேன்.

No comments:
Post a Comment