Thursday, November 14, 2013

ராமாயணத்தில் ராமன் ‘வில்’லன், ராவணன்தான் ‘கதா’நாயகன்”

ராமாயணத்தில் ராமன் ‘வில்’லன், ராவணன்தான் ‘கதா’நாயகன்”

இப்படி ஒரு ஜோக்கை எங்கோ படித்த @Suresh Babu அதைBangalore Foodies ClubRajesh Gargaஇடம் காட்ட, ’ராவணன்கிட்ட ஏது கதாயுதம்?’ என்று @Rajesh garga குறுக்குக் கேள்வி கேட்க, ‘ஜோக் சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது’ என்று @suresh babu சொல்ல... பஞ்சாயத்து என்னிடம் வந்தது: ராவணனிடம் கதாயுதம் உண்டா?

சுவாரஸ்யமான கேள்விதான். கொஞ்சம் கம்பனில் தேடினேன்.

ராமனுடன் போர் செய்த ராவணனின் ஆயுதங்களைப் பட்டியல் போடுகிறார் கம்பர்:

மழு
எழு
தோமரம்
மணித் தண்டு
இருப்பு உலக்கை
அயில்
வாள்
சக்கரம்
சூலம்

இதில் ‘மணித் தண்டு’ என்பதுதான் கதாயுதம் என்று நம் கம்பன் ஆசிரியர் @Hari Krishnan எழுதியிருக்கிறார்.

ஆக, இந்த ஒரு பாட்டினில்மட்டுமேனும் ராவணன் ‘கதா’நாயகன்தான்!

No comments:

Post a Comment