JayBee writes:
அன்புள்ள இணையத்தாரே!
இடம்பெயர்ந்து சென்று குடியேறிய மக்களுக்குப் பழந்தமிழில்
"புலம்பெயர்மாக்கள்" என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. இது
சிலப்பதிகாரத்தில் வருகிறது.
"மாக்கள்" என்னும் சொல் தற்கால வழக்கிற்கு ஒத்துவராது.
"புடைப்பெயர்ச்சி" என்னும் மற்றொரு சொற்றொடரும் இருக்கிறது. இதுவும் "Emigration"-ஐக் குறிக்கும்.
ஆகவே, தமிழகம், ஈழம் அல்லாத மற்ற நாட்டுத்தமிழரை
"புலம்பெயர்த்தமிழர்" என்றோ "புடைபெயர்த் தமிழர்" என்றோ சொல்லலாம்.
சாதாரணமாக மக்கள் புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உண்டு.
தொழில்நுணுக்கம், பிழைப்பு, சஞ்சிக்கூலி முறை, நாடுகடத்தல், பூர்வீக
நாட்டில் இட நெருக்கடி அல்லது அரசியல் நெருக்கடி, நாடு பிடிக்கும்
வேட்கை, Adventurism, colonisation,போன்றவை அவை.
சீனர்கள், ஆங்கிலேயர், எஸ்பானியர் முதலியோர் இப்படித்தான் பரவினர்.
இந்த "Diaspora" என்ற சொல் சற்று வித்தியாசமானது. இது ஒரு கிரேக்க
மொழிச்சொல்.
"To scatter about" என்னும் பொருள் கொண்டது.இந்தச் சொல்.
யூதமக்கள் உலகெங்கும் சிதறிப்போயினமையைக் குறிக்கத் தற்காலத்தில்
பயன்படுத்தப்படுகிறது. இது "Exile" என்னும் சொல்லினின்றும் வேறுபட்டது.
"டயஸ்போரா" என்பது சிதறலை மட்டும் குறிக்க மாட்டாது.
It is actually a way of life and an intellectual concept.
யூத டயஸ்போரா பல புதிய யூத கலாசாரங்களை எற்படுத்தியது.
அமெரிக்க யூத கலாசாரம், ஜெர்மன் யூதக் கலாசாரம், அரபு நாட்டு யூதக்
கலாசாரம், என்று பல வகையான யூதகலாசாரங்கள் உள்ளன.
ஆனால், இவற்றின்மூலமும், கருப்பொருளும் எப்போதுமே யூதத்துவமாகத்தான் இருந்திருக்கிறது.('ஹிந்துத்து வம்' என்னும்போது ஏன் 'யூதத்துவம்' என்று
சொல்லக்கூடாது?)
ஈழத்தமிழர்கள் சமீப காலத்திலேயே உலகின் சிலநாடுகளில் வசிக்க
நேர்ந்தது. ஈழத்தில் இருக்கமுடியாதது பொன்ற சில குறிப்பிட்ட காரணங்களால் அவர்கள் புலம் பெயர நேரிட்டது.
புலம் பெயர்த்தமிழர்கள் மலேசியா,சிங்கை,மாரீஷியஸ், தென்னாப்பிரிக்கா,
முதலிய இடங்களிலேயே கணிசமான அளவில் காணப்படுகின்றனர்.
U.A.R.,U.K., U.S.,Canada, Australia, போன்ற நாடுகளில் அவர்களில்
பெரும்பாலோர் Expatriates ஆக வாழ்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தத்தம்
தாய்நாட்டிற்கு விரைவில் திரும்பிவிடுவார்கள்.
Distinct Cultures உருவாக ஒரு வேளை இன்னும் அதிக காலம் பிடிக்கலாம்.
ஆகையால்தான் இந்த "Diaspora" என்னும் சொல், தமிழருக்குப் பொருந்தும்
என்று தோன்றவில்லை.
ஜெயபாரதி
>
Nandhan of New Zealand writes:
>
>Anpulla Dr.Jeya
>Your explanation is a timely one.
>Then "Tamil Diaspora" would be
>புலம் பெயர்ந்த தமிழர் அல்லது புலம் பெயர்த்த தமிழர் அல்லது
>புலம் பெயர் தமிழர்.
>
>சிலம்பில் காட்டிய மேற்கோளுக்கு ஆயிரம் நன்றிகள்.
>அது எந்தவிடத்தில் வருகிறது என அறிய ஆவல்.
>
>அன்புடன்
>நந்தன்
>நியூசிலாந்து
JayBee Answers:
அன்புள்ள நந்தன்,
சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வரி 11....
"கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்...."
இது காவிரிப்பூம்பட்டினத்தின் வர்ணனையில் வருகிறது.
கலம் தரு திருவின்: மரக்கலத்தால் ஈட்டப்படும் செல்வத்தின் பொருட்டு
புலம்பெயர் மாக்கள் : தம் நாட்டை விட்டு வந்த வேற்று நாட்டு மக்கள்
ஒருங்கே கூடி நெருங்கி வசிக்கின்ற, அலைகள் வாய்த்த கரையின்
அருகில் அமைந்துள்ள குடியிருப்புகள்..
ஜெயபாரதி
அன்புள்ள இணையத்தாரே!
இடம்பெயர்ந்து சென்று குடியேறிய மக்களுக்குப் பழந்தமிழில்
"புலம்பெயர்மாக்கள்" என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. இது
சிலப்பதிகாரத்தில் வருகிறது.
"மாக்கள்" என்னும் சொல் தற்கால வழக்கிற்கு ஒத்துவராது.
"புடைப்பெயர்ச்சி" என்னும் மற்றொரு சொற்றொடரும் இருக்கிறது. இதுவும் "Emigration"-ஐக் குறிக்கும்.
ஆகவே, தமிழகம், ஈழம் அல்லாத மற்ற நாட்டுத்தமிழரை
"புலம்பெயர்த்தமிழர்" என்றோ "புடைபெயர்த் தமிழர்" என்றோ சொல்லலாம்.
சாதாரணமாக மக்கள் புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உண்டு.
தொழில்நுணுக்கம், பிழைப்பு, சஞ்சிக்கூலி முறை, நாடுகடத்தல், பூர்வீக
நாட்டில் இட நெருக்கடி அல்லது அரசியல் நெருக்கடி, நாடு பிடிக்கும்
வேட்கை, Adventurism, colonisation,போன்றவை அவை.
சீனர்கள், ஆங்கிலேயர், எஸ்பானியர் முதலியோர் இப்படித்தான் பரவினர்.
இந்த "Diaspora" என்ற சொல் சற்று வித்தியாசமானது. இது ஒரு கிரேக்க
மொழிச்சொல்.
"To scatter about" என்னும் பொருள் கொண்டது.இந்தச் சொல்.
யூதமக்கள் உலகெங்கும் சிதறிப்போயினமையைக் குறிக்கத் தற்காலத்தில்
பயன்படுத்தப்படுகிறது. இது "Exile" என்னும் சொல்லினின்றும் வேறுபட்டது.
"டயஸ்போரா" என்பது சிதறலை மட்டும் குறிக்க மாட்டாது.
It is actually a way of life and an intellectual concept.
யூத டயஸ்போரா பல புதிய யூத கலாசாரங்களை எற்படுத்தியது.
அமெரிக்க யூத கலாசாரம், ஜெர்மன் யூதக் கலாசாரம், அரபு நாட்டு யூதக்
கலாசாரம், என்று பல வகையான யூதகலாசாரங்கள் உள்ளன.
ஆனால், இவற்றின்மூலமும், கருப்பொருளும் எப்போதுமே யூதத்துவமாகத்தான் இருந்திருக்கிறது.('ஹிந்துத்து
சொல்லக்கூடாது?)
ஈழத்தமிழர்கள் சமீப காலத்திலேயே உலகின் சிலநாடுகளில் வசிக்க
நேர்ந்தது. ஈழத்தில் இருக்கமுடியாதது பொன்ற சில குறிப்பிட்ட காரணங்களால் அவர்கள் புலம் பெயர நேரிட்டது.
புலம் பெயர்த்தமிழர்கள் மலேசியா,சிங்கை,மாரீஷியஸ், தென்னாப்பிரிக்கா,
முதலிய இடங்களிலேயே கணிசமான அளவில் காணப்படுகின்றனர்.
U.A.R.,U.K., U.S.,Canada, Australia, போன்ற நாடுகளில் அவர்களில்
பெரும்பாலோர் Expatriates ஆக வாழ்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தத்தம்
தாய்நாட்டிற்கு விரைவில் திரும்பிவிடுவார்கள்.
Distinct Cultures உருவாக ஒரு வேளை இன்னும் அதிக காலம் பிடிக்கலாம்.
ஆகையால்தான் இந்த "Diaspora" என்னும் சொல், தமிழருக்குப் பொருந்தும்
என்று தோன்றவில்லை.
ஜெயபாரதி
>
Nandhan of New Zealand writes:
>
>Anpulla Dr.Jeya
>Your explanation is a timely one.
>Then "Tamil Diaspora" would be
>புலம் பெயர்ந்த தமிழர் அல்லது புலம் பெயர்த்த தமிழர் அல்லது
>புலம் பெயர் தமிழர்.
>
>சிலம்பில் காட்டிய மேற்கோளுக்கு ஆயிரம் நன்றிகள்.
>அது எந்தவிடத்தில் வருகிறது என அறிய ஆவல்.
>
>அன்புடன்
>நந்தன்
>நியூசிலாந்து
JayBee Answers:
அன்புள்ள நந்தன்,
சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வரி 11....
"கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்...."
இது காவிரிப்பூம்பட்டினத்தின் வர்ணனையில் வருகிறது.
கலம் தரு திருவின்: மரக்கலத்தால் ஈட்டப்படும் செல்வத்தின் பொருட்டு
புலம்பெயர் மாக்கள் : தம் நாட்டை விட்டு வந்த வேற்று நாட்டு மக்கள்
ஒருங்கே கூடி நெருங்கி வசிக்கின்ற, அலைகள் வாய்த்த கரையின்
அருகில் அமைந்துள்ள குடியிருப்புகள்..
ஜெயபாரதி
No comments:
Post a Comment